உறுப்பினர்கள்

Google+ Followers

Thursday, March 8, 2012

1. அர்ஜுனனின் விஷாத யோகம் ( ARJUNA'S DILEMMA )


(குழப்பமும் கலக்கமும் )
1.1   :திருதராஷ்டிரன் கேட்டது : சஞ்சயா ! தர்மபூமியாகிய குருக்ஷேத்திரத்தில்  போர் செய்வதற்காக கூடி நின்ற என் பிள்ளைகளும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்.

1.2   :சஞ்சயன் சொன்னது : அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை பார்த்து விட்டு அரசனாகிய துரியோதனன் ஆச்சார்ய துரோணரை அணுகி கூறினான்.
1.3   :ஆசாரியரே ! உமது சீடனும் புத்திசாலியும் துருபதனின் மகனுமான த்ருஷ்டயும்னனால் அணிவகுக்கப்பட்ட பாண்டவர்களின் பெரிய படையை பாருங்கள்.
1.4-6 : சாத்யகி, விராடமன்னன், மகாரதனான துருபதன், திருஷ்டகேது, சேகிதானன், பலசாலியான காசி மன்னன், புருஜித், குந்தி போஜன், மனிதருள் சிறந்தவனான சிபியின் வம்சத்தில் வந்த மன்னன், பராகிரமசாலியான யுதாமன்யு, பலசாலியான உத்தமௌஜன், அபிமன்யு ,திரௌபதியின் பிள்ளைகள் என்று பீமணுக்கும் அர்ஜுனனுக்கும் இணையான பெரிய வில் வீரர்கள் பலர் பாண்டவர் படையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் மகாரதர்கள்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

2 . சாங்கிய யோகம் / புத்தி யோகம் ( TRANSCENDENTAL KNOWLEDGE )( உண்மையறிவை துனைகொள் )  2.1 : சஞ்சயன் சொன்னது : இரக்கத்தால் நெகிழ்ந்து, கண்ணீர் நிறைந்ததால் பார்வை மறைந்து, சோகத்தில் மூழ்கியிருந்த அர்ஜுனனிடம் கிருஷ்ணர் இவ்வாறு சொல்ல தொடங்கினார்.

2.2 : ஸ்ரீ பகவான் சொன்னது : அர்ஜுனா ! மேன்மக்களுக்கு போருந்தாததும், சொர்க்க பேற்றை தடுப்பதும், இகழ்ச்சிக்குரியதுமான மனசோர்வு இக்கட்டான இந்த நிலையில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது ?
2.3 : அர்ஜுனா ! பேடி தனத்திற்கு இடம் தராதே. இது உன்னக்கு பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே ! அற்பமான இந்த மன தளர்ச்சியை விட்டுவிட்டு எழுந்திரு.
2.4 : அர்ஜுனன் சொன்னது : எதிரிகளை கொள்பவனே ! மது என்ற அரக்கனை கொன்றவனே ! வழிப்படதக்கவர்களான பீஷ்மரையும் துரோனரையும் எதிர்த்து நான் எப்படி பாணங்களை விடுவேன்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

3. கர்ம யோகம் ( PATH OF SELFLESS SERVICE )


( வாழ்க்கையே யோகம் )


3.1 : ஜனார்த்தனா ! கேசவா  ! செயலைவிட ஞானம் சிறந்தது என்பது உனது கருத்தானால் பயங்கரமான செயலில் ஏன் என்னை ஏவுகிறாய் ?
3.2 : முரண்படுகின்ற வார்த்தைகளால் எனது அறிவை குழப்புகிறாய் போலும். எது எனக்கு நன்மை தருமோ அந்த ஒன்றை எனக்கு உறுதியாக சொல்.
3.3 : பகவான் சொன்னது : பாவமற்றவனே ! இந்த உலகில் இரண்டு நெறிகளை முன்பே நான் போதித்து இருக்கிறேன். சாங்கியர்களுக்கு ஞான யோகம், யோகிகளுக்கு கர்ம யோகம்.
3.4 : வெறுமனே வேலை செய்யாமல் இருப்பதால் ஒருவன் செயல்களற்ற நிலையை அடைந்து விட மாட்டான். செயல்களை விட்டுவிடுவதால் யாரும் நிறைநிலையை அடைவதில்லை.
3.5 : யாரும் ஒரு கனபொழுதும் செயலில் ஈடுபடாமல் இருப்பதில்லை, ஏனெனில் ஒவ்வொருவரும் இயற்கையிலிருந்து தோன்றிய குணங்களால் ஏவப்பட்டு தன்வசம் இல்லாமல் செயலில் ஈடுபடுத்தபடுகிறார்கள்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

4 . ஞானகர்ம சந்நியாச யோகம் ( PATH OF RENUNCIATION WITH KNOWLEDGE )


( கடமைகளை வேள்வியாக செய் )4.1 : பகவான் சொன்னது : அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஷ்வானுக்கு (சூரியன்) சொன்னேன். விவஷ்வான் மனுவுக்கு சொன்னான் . மனு இக்ஷ்வாவிற்கு  சொன்னார்.
4.2 : எதிரிகளை வாடுபவனே ! இவ்வாறு பரம்பரையாக வந்த இந்த யோகத்தை ராஜரிஷிகள் அறிந்திருந்தார்கள். நீண்ட காலம் ஆகிவிட்டதால் இப்போது அந்த யோகம் சீரழிந்துவிட்டது.
4.3 : நீ என்னுடைய பக்தனாகவும், தோழனாகவும் இருக்கிறாய், எனவே பழமை வாய்ந்த அதே யோகத்தை இன்று உனக்கு சொன்னேன். இது மேலானதும் ரகசியமானதும் ஆகும்.
4.4 : அர்ஜுனன் கேட்டது : உனது பிறப்பு பிந்தியது, சூரியனுடைய பிறப்பு முந்தியது, அவருக்கு நீ சொன்னதாக கூறியதை எப்படி புரிந்துக்கொள்வது ?

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

5 . சன்னியாச யோகம் ( PATH OF RENUNCIATION )


( ஒன்றை தேர்ந்தெடுத்து செயல்பாடு ) 5.1 : அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! செயல்களை விடுவது பற்றியும் சொல்கிறாய், அதே வேளையில் கர்மயோகம் செய்வது பற்றியும் சொல்கிறாய். இவற்றுள் எது சிறந்தது என்று எனக்கு நன்றாக உறுதி செய்யப்பட்டுள்ளதோ அந்த ஒன்று எனக்கு சொல்வாய்.
5.2 : பகவான் சொன்னது : செயல்களை விடுவது, கர்மயோகத்தில் ஈடுபடுவது ஆகிய இரண்டும் உயர்ந்த பலனை அளிப்பவை தான். அவற்றுள் செயல்களை விடுவதை விட கர்மயோகம் சிறந்தது.
5.3 : பெருந்தோள் உடையவனே ! யார் வெறுப்பதும் விரும்புவதும் இல்லையோ அவனே மிக உயர்ந்த துறவி. ஏனெனில் இருமைகள் அற்றவன் பந்தத்திலிருந்து எளிதில் விடுபடுகிறான்.
5.4 : செயல்களை விடுவது, செயல்களில் ஈடுபடுவது இரண்டும் வெவ்வேறானவை என்று பக்குவம் பெறாதவர்கள் பேசுகிறார்கள். அறிவாளிகள் அவ்வாறு பேசுவது இல்லை. இரண்டில் ஏதாவது ஒன்றையேனும் உரிய முறையில் கடைபிடித்தவன்  இரண்டையும் பின்பற்றிய பலனை அடைகிறான்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

6 . தியான யோகம் ( PATH OF MEDITATION )


( மனத்தை வசபடுத்து )6.1 : பகவான் சொன்னது : செய்ய வேண்டிய செயல்களை யார் கர்மபலனை எதிர்பாராமல் செய்கிறானோ அவனே துறவி, அவனே யோகி, அக்னி சம்பந்தமான கிரியைகள் செய்யாதவனோ, செயல்களில் ஈடுபடாதவனோ இல்லை .
6.2 : அர்ஜுனா ! எதை துறவு என்று சொல்கிறார்களோ அதை யோகம் என்று அறிந்துகொள். ஏனெனில் சங்கல்பத்தை விடாத யாரும் யோகி ஆவதில்லை.
6.3 : தியான யோகத்தை நாடுகின்ற முனிவனுக்கு செயல்கள் வழி என்று சொல்லபடுகிறது. அவனே தியான யோக நிலையை அடைந்து விட்டால் செயலின்மை வழியாக அமைகிறது.  
6.4 : எப்போது புலன்கள் நாடுகின்ற பொருட்களில் ஒருவன் ஆசை வைப்பதில்லையோ , செயலில் பற்று வைப்பதில்லையோ, எல்லா நுண்நிலை ஆசைகளையும் விட்டுவிடுகின்ற அவன் தியானயோக நிலையை அடைந்து விட்டவன்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...