உறுப்பினர்கள்

Google+ Followers

Thursday, March 8, 2012

1. அர்ஜுனனின் விஷாத யோகம் ( ARJUNA'S DILEMMA )


(குழப்பமும் கலக்கமும் )
1.1   :திருதராஷ்டிரன் கேட்டது : சஞ்சயா ! தர்மபூமியாகிய குருக்ஷேத்திரத்தில்  போர் செய்வதற்காக கூடி நின்ற என் பிள்ளைகளும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்.

1.2   :சஞ்சயன் சொன்னது : அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை பார்த்து விட்டு அரசனாகிய துரியோதனன் ஆச்சார்ய துரோணரை அணுகி கூறினான்.
1.3   :ஆசாரியரே ! உமது சீடனும் புத்திசாலியும் துருபதனின் மகனுமான த்ருஷ்டயும்னனால் அணிவகுக்கப்பட்ட பாண்டவர்களின் பெரிய படையை பாருங்கள்.
1.4-6 : சாத்யகி, விராடமன்னன், மகாரதனான துருபதன், திருஷ்டகேது, சேகிதானன், பலசாலியான காசி மன்னன், புருஜித், குந்தி போஜன், மனிதருள் சிறந்தவனான சிபியின் வம்சத்தில் வந்த மன்னன், பராகிரமசாலியான யுதாமன்யு, பலசாலியான உத்தமௌஜன், அபிமன்யு ,திரௌபதியின் பிள்ளைகள் என்று பீமணுக்கும் அர்ஜுனனுக்கும் இணையான பெரிய வில் வீரர்கள் பலர் பாண்டவர் படையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் மகாரதர்கள்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

2 . சாங்கிய யோகம் / புத்தி யோகம் ( TRANSCENDENTAL KNOWLEDGE )( உண்மையறிவை துனைகொள் )  2.1 : சஞ்சயன் சொன்னது : இரக்கத்தால் நெகிழ்ந்து, கண்ணீர் நிறைந்ததால் பார்வை மறைந்து, சோகத்தில் மூழ்கியிருந்த அர்ஜுனனிடம் கிருஷ்ணர் இவ்வாறு சொல்ல தொடங்கினார்.

2.2 : ஸ்ரீ பகவான் சொன்னது : அர்ஜுனா ! மேன்மக்களுக்கு போருந்தாததும், சொர்க்க பேற்றை தடுப்பதும், இகழ்ச்சிக்குரியதுமான மனசோர்வு இக்கட்டான இந்த நிலையில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது ?
2.3 : அர்ஜுனா ! பேடி தனத்திற்கு இடம் தராதே. இது உன்னக்கு பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே ! அற்பமான இந்த மன தளர்ச்சியை விட்டுவிட்டு எழுந்திரு.
2.4 : அர்ஜுனன் சொன்னது : எதிரிகளை கொள்பவனே ! மது என்ற அரக்கனை கொன்றவனே ! வழிப்படதக்கவர்களான பீஷ்மரையும் துரோனரையும் எதிர்த்து நான் எப்படி பாணங்களை விடுவேன்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

3. கர்ம யோகம் ( PATH OF SELFLESS SERVICE )


( வாழ்க்கையே யோகம் )


3.1 : ஜனார்த்தனா ! கேசவா  ! செயலைவிட ஞானம் சிறந்தது என்பது உனது கருத்தானால் பயங்கரமான செயலில் ஏன் என்னை ஏவுகிறாய் ?
3.2 : முரண்படுகின்ற வார்த்தைகளால் எனது அறிவை குழப்புகிறாய் போலும். எது எனக்கு நன்மை தருமோ அந்த ஒன்றை எனக்கு உறுதியாக சொல்.
3.3 : பகவான் சொன்னது : பாவமற்றவனே ! இந்த உலகில் இரண்டு நெறிகளை முன்பே நான் போதித்து இருக்கிறேன். சாங்கியர்களுக்கு ஞான யோகம், யோகிகளுக்கு கர்ம யோகம்.
3.4 : வெறுமனே வேலை செய்யாமல் இருப்பதால் ஒருவன் செயல்களற்ற நிலையை அடைந்து விட மாட்டான். செயல்களை விட்டுவிடுவதால் யாரும் நிறைநிலையை அடைவதில்லை.
3.5 : யாரும் ஒரு கனபொழுதும் செயலில் ஈடுபடாமல் இருப்பதில்லை, ஏனெனில் ஒவ்வொருவரும் இயற்கையிலிருந்து தோன்றிய குணங்களால் ஏவப்பட்டு தன்வசம் இல்லாமல் செயலில் ஈடுபடுத்தபடுகிறார்கள்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

4 . ஞானகர்ம சந்நியாச யோகம் ( PATH OF RENUNCIATION WITH KNOWLEDGE )


( கடமைகளை வேள்வியாக செய் )4.1 : பகவான் சொன்னது : அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஷ்வானுக்கு (சூரியன்) சொன்னேன். விவஷ்வான் மனுவுக்கு சொன்னான் . மனு இக்ஷ்வாவிற்கு  சொன்னார்.
4.2 : எதிரிகளை வாடுபவனே ! இவ்வாறு பரம்பரையாக வந்த இந்த யோகத்தை ராஜரிஷிகள் அறிந்திருந்தார்கள். நீண்ட காலம் ஆகிவிட்டதால் இப்போது அந்த யோகம் சீரழிந்துவிட்டது.
4.3 : நீ என்னுடைய பக்தனாகவும், தோழனாகவும் இருக்கிறாய், எனவே பழமை வாய்ந்த அதே யோகத்தை இன்று உனக்கு சொன்னேன். இது மேலானதும் ரகசியமானதும் ஆகும்.
4.4 : அர்ஜுனன் கேட்டது : உனது பிறப்பு பிந்தியது, சூரியனுடைய பிறப்பு முந்தியது, அவருக்கு நீ சொன்னதாக கூறியதை எப்படி புரிந்துக்கொள்வது ?

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

5 . சன்னியாச யோகம் ( PATH OF RENUNCIATION )


( ஒன்றை தேர்ந்தெடுத்து செயல்பாடு ) 5.1 : அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! செயல்களை விடுவது பற்றியும் சொல்கிறாய், அதே வேளையில் கர்மயோகம் செய்வது பற்றியும் சொல்கிறாய். இவற்றுள் எது சிறந்தது என்று எனக்கு நன்றாக உறுதி செய்யப்பட்டுள்ளதோ அந்த ஒன்று எனக்கு சொல்வாய்.
5.2 : பகவான் சொன்னது : செயல்களை விடுவது, கர்மயோகத்தில் ஈடுபடுவது ஆகிய இரண்டும் உயர்ந்த பலனை அளிப்பவை தான். அவற்றுள் செயல்களை விடுவதை விட கர்மயோகம் சிறந்தது.
5.3 : பெருந்தோள் உடையவனே ! யார் வெறுப்பதும் விரும்புவதும் இல்லையோ அவனே மிக உயர்ந்த துறவி. ஏனெனில் இருமைகள் அற்றவன் பந்தத்திலிருந்து எளிதில் விடுபடுகிறான்.
5.4 : செயல்களை விடுவது, செயல்களில் ஈடுபடுவது இரண்டும் வெவ்வேறானவை என்று பக்குவம் பெறாதவர்கள் பேசுகிறார்கள். அறிவாளிகள் அவ்வாறு பேசுவது இல்லை. இரண்டில் ஏதாவது ஒன்றையேனும் உரிய முறையில் கடைபிடித்தவன்  இரண்டையும் பின்பற்றிய பலனை அடைகிறான்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

6 . தியான யோகம் ( PATH OF MEDITATION )


( மனத்தை வசபடுத்து )6.1 : பகவான் சொன்னது : செய்ய வேண்டிய செயல்களை யார் கர்மபலனை எதிர்பாராமல் செய்கிறானோ அவனே துறவி, அவனே யோகி, அக்னி சம்பந்தமான கிரியைகள் செய்யாதவனோ, செயல்களில் ஈடுபடாதவனோ இல்லை .
6.2 : அர்ஜுனா ! எதை துறவு என்று சொல்கிறார்களோ அதை யோகம் என்று அறிந்துகொள். ஏனெனில் சங்கல்பத்தை விடாத யாரும் யோகி ஆவதில்லை.
6.3 : தியான யோகத்தை நாடுகின்ற முனிவனுக்கு செயல்கள் வழி என்று சொல்லபடுகிறது. அவனே தியான யோக நிலையை அடைந்து விட்டால் செயலின்மை வழியாக அமைகிறது.  
6.4 : எப்போது புலன்கள் நாடுகின்ற பொருட்களில் ஒருவன் ஆசை வைப்பதில்லையோ , செயலில் பற்று வைப்பதில்லையோ, எல்லா நுண்நிலை ஆசைகளையும் விட்டுவிடுகின்ற அவன் தியானயோக நிலையை அடைந்து விட்டவன்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

7 . ஞான விஞ்ஞான யோகம் ( SELF KNOLEDGE AND ENLIGHTMENT )


( எங்கும் இறைவன் )7.1 : பகவான் சொன்னது : அர்ஜுனா ! என்னிடம் மனத்தை வைத்து என்னை சார்ந்து, யோகத்தில் ஈடுபட்டு, என்னை சந்தேகத்திற்கு இடமின்றி எப்படி முற்றிலுமாக அறிவது என்பதை சொல்கிறேன் கேள்.
7.2 : விஞ்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை நான் உனக்கு முழுமையாக கூறுகிறேன். இதை அறிந்தால் மேலும் அறிவதற்கு எதுவும் பாக்கியிருக்கிறது.
7.3 : ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் இறை நிலைக்காக முயல்கிறான். அவர்களிலும் யாரோ ஒருவன் தான் என்னை உள்ளது உள்ளபடி அறிகிறான்.
7.4 : மண், நீர், தீ, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அகங்காரம் என்று இந்த எட்டு விதமாக பிரித்திக்கின்ற சக்தி என்னுடையதே.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

8. அக்ஷர ப்ரஹ்ம யோகம் ( THE ETERNAL BRAHMA )


(மரணத்திற்கு பின்னால் )8.1 : அர்ஜுனன் கேட்டது : மனிதருள் சிறந்தவனே ! பிரம்மம் எது ? ஆன்மா எது ? அதிபூதம் எது ? அதிதெய்வம் என்று எது சொல்லபடுகிறது ?
8.2 : கிருஷ்ணா ! இந்த உடம்பில் அதியஜ்ஞன் யார் ? அவர் எப்படி இருக்கிறார்?, சுயகட்டுப்பாடு உடையவர்கள் மரண காலத்திலும் உன்னை எப்படி நினைக்கிறார்கள் ?
8.3 : பகவான் சொன்னது : பிரம்மம் அழிவற்றது, மேலானது, அதன் இயல்பு ஆன்மா என்று சொல்லபடுகிறது. உயிர்களை உண்டாக்கி வளர செய்வதாகிய வேள்வி கர்மம் எனபடுகிறது.
8.4 :  உடல் தரித்தவர்களுள் உயர்தவனே ! அழியும் பொருள் அதிபூதம் எனபடுகிறது. உடம்பில் உறைபவன் அதிதெய்வம், இந்த உடம்பில் அதியஜ்ஞமாக நானே இருக்கின்றேன்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

9 . ராஜ வித்யா ராஜகுஹ்ய யோகம் ( SUPREME KNOWLEDGE AND THE BIG MYSTERY )
( பக்தியே ரகசியம் )


9.1 : பகவான் சொன்னது : எதை அறிந்தால் தடைகளிலிருந்து விடுபடுவாயோ, விஞ்ஜானத்துடன் கூடியதும் அதிரகசியமானதுமான அந்த பாதையை தவறான பார்வையில்லாதவனான உனக்கு சொல்கிறேன்.
9.2 : இந்த பாதை வித்தைகளுள் தலை சிறந்தது, அதிரகசியமானது, புனிதபடுத்துவதில் தலை சிறந்தது, கண்கூடாக உணரத்தக்கது, தர்மத்துடன் கூடியது, செய்வதற்கு இன்பமானது, அழிவற்றது.
9.3 : எதிரிகளை வாட்டுபவனே ! இந்த தர்மத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் என்னை அடையாமல் மரணத்துடன் கூடிய உலக வாழ்க்கையில் உழல்கிறான்.
9.4 : புலன்களுக்கு தென்படாத என்னால் இந்த உலகம் அனைத்தும் வியப்பிக்கபட்டுள்ளது. எல்லா உயிர்களும் என்னிடம் இருக்கின்றன, நானோ அவற்றில் இல்லை.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

10 . விபூதி யோகம் ( MANIFESTATION OF THE ABSOLUTE )


(திருப்புகழ்) 


10.1 : பகவான் சொன்னது : பெருந்தோள் உடையவனே ! எனது மேலான வார்த்தைகளை கேள். கேட்பதில் மகிழ்ச்சி அடைகின்ற உனது நன்மைக்காக நான் மீண்டும் சொல்கிறேன்.
10.2 : எனது ஆரம்பத்தை தேவர்களும் மகரிஷிகளும் அறியவில்லை. ஏனெனில் நான் தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் எல்லாவகையிலும் முற்பட்டவன்.
10.3 : நான் பிறப்பற்றவன், ஆரம்பமற்றவன், உலகின் தலைவன் என்று யார் அறிகிறானோ அவன் மனமயக்கம் இல்லாதவன் . அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

11 . விஸ்வரூப தரிசன யோகம் ( VISION OF THE COSMIC FORM )( வாழ்க்கையின் மறுப்பக்கம் )11.1 : அர்ஜுனன் சொன்னது : மேலான, ரகசியமான ஆத்மதத்துவத்தை பற்றி நீ கூறியருளியதால் எனது மனமயக்கம் போய்விட்டது.
11.2 : தாமரை இதழ் போன்ற கண்களை உடையவனே ! உயிர்களின் பிறப்பு இறப்பு பற்றியும் உனது எல்லையற்ற மகிமை பற்றியும் உன்னிடமிருந்தே நான் விரிவாக தெரிந்துகொண்டேன்.
11.3 : பரமேசுவரா ! நீ உன்னை பற்றி சொன்னவை அனைத்தையும் அப்படியே உண்மை. புருஷோத்தமா ! இனி உனது தெய்வ வடிவை நான் காண விரும்புகிறேன்.
11.4 : எம்பெருமானே ! யோகேசுவரா ! அந்த தெய்வ வடிவத்தை காண நான் தகுதி பெற்றவன் என்று நீ கருதினால் அழிவற்ற அந்த உனது வடிவை எனக்கு காட்டி அருள்வாய்.
11.5 : அர்ஜுனா ! பலவிதமான, தெய்வீகமான பல நிறங்களும், வடிவங்களும் உடைய எனது உருவங்களை நூற்றுக்கணக்காக ஆயிரக்கணக்காக பார்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

12 . பக்தி யோகம் ( PATH OF DEVOTION )


( பக்தி செய் )


12.1 :  அர்ஜுனன் கேட்டது : எப்போதும் யோகத்தில் நிலைத்திருந்து உன்னை வழிபடுபவர்கள், புலன்களால் அறிய முடியாத அழிவற்ற பிரம்மத்தை நாடுபவர்கள் – இவர்களுள் யோகத்தை நன்றாக அறிந்தவர்கள் யார் ?
12.2 : பகவான் சொன்னது : மனத்தை என்னிடம் வைத்து, யோக பக்தியில் நிலைபெற்று, மேலான சிரத்தையுடன் யார் என்னை வழிபடுகிறார்களோ அவர்கள் மேலான யோகிகள் என்பது எனது கருத்து.
12.3 – 4 : புலன் கூட்டங்களை நன்றாக வசபடுத்தி, எல்லோரிடமும் சமநோக்குடன் எல்லா உயிர்களுக்கும் நன்மையை விரும்பி, சொல்லால் விளக்க முடியாததும் எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு எட்டாததும், மாறாததும், அசைவற்றதும், நிலைத்ததும், அழிவற்றதுமான பிரம்மத்தை வழிபடுபவர்களும் என்னையே அடைகிறார்கள்.
12.5 : நிர்க்குண பிரம்மத்தில் மனத்தை வைக்கின்ற அவர்களுக்கு முயற்சி அதிகம் வேண்டும். ஏனெனில் உடலுனர்வு உடையவர்களுக்கு நிர்க்குண பிரம்ம நெறி மிகவும் கடினமானதாகும்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

13 . க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் ( CREATION AND THE CREATOR )

                       

( மனிதனும் மருபிறவியும் ) 13.1 : பகவான் சொன்னது : அர்ஜுனா ! இந்த உடம்பு வீடு, இதை யார் அறிகிறானோ அவர் அதில் குடியிருப்பவன். உண்மையை உணர்ந்தவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
13.2 : அர்ஜுனா ! எல்லா வீடுகளிலும் குடியிருப்பவன் நான் என்று அறிந்துகொள். வீடு மற்றும் குடியிருப்பவனை பற்றிய அறிவே உண்மை அறிவு என்பது எனது கருத்து .

13.3 : அந்த வீடு எது, எப்படிபட்டது, என்ன மாற்றங்களுக்கு உள்ளாவது எதிலிருந்து எது உண்டாகிறது, குடியிருப்பவன் யார், அவனது மகிமை என்ன ஆகியவற்றை சுருக்கமாக கூறுகிறேன் கேள்.
13.4 : இந்த உண்மையை முனிவர்கள் பல வடிவ பாடல்களில் பல விதமாக பாடியுள்ளனர். காரண காரியங்களுடன் நிச்சயமான வகையில் அமைந்துள்ள பிரம்ம சூத்திரங்களிலும் இது ஆராயப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

14 . குனத்ரய விபாக யோகம் ( THREE MODES OF MATERIAL NATURE )


( மூன்று குணங்கள் )
14.1 : பகவான் சொன்னது : எதை அறிந்து, எல்லா முனிவர்களும் மேலான நிலையை அடைந்தார்களோ, ஞானங்களுள் மிக சிறந்ததும் மேலானதுமான அந்த ஞானத்தை மீண்டும் சொல்கிறேன்.
14.2 : இந்த ஞானத்தை பெற்று எனது நிலையை அடைந்தவர்கள் படைப்பின்போது பிறப்பதில்லை. பிரளய காலத்திலும் கலங்குவதில்லை.
14.3 : அர்ஜுனா ! பெரியதான மாயை எனது கருப்பை. அதில் நான் விதையை வைக்கிறேன். அதிலிருந்து எல்லா உயிர்களின் உற்பத்தி உண்டாகின்றன.
14.4 : அர்ஜுனா ! கருப்பைகளில் பிறக்கின்ற உயிரினங்கள் அனைத்திற்கும் பிறப்பிடம் பெரியதான மாயை. விதையை கொடுக்கின்ற தந்தை நான்.
14.5 : பெரிய தோள்களை உடையவனே ! மாயையிலிருந்து தோன்றிய சத்வம், தமஸ், ரஜஸ் என்ற மூன்று குணங்களும் அழிவற்றவனான மனிதனை உடம்பில் பிணைக்கிறது.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

15 . புருஷோத்தம யோகம் ( THE SUPREME BEING )( வாழ்க்கை மரம் )


15.1 : பகவான் சொன்னது : மேலே வேர் உள்ளதும் கீழே கிளைகள் உள்ளதுமாகிய அரசமரத்தை அழிவற்றதாக கூறுகின்றனர். வேதங்கள் அதன் இலைகள். அந்த மரத்தை யார் அறிகிறானோ அவன் உண்மையை அறிந்தவன்.
15.2 : அதன் கிளைகள் குணங்களால் செழிப்படைந்து, விஷயங்களாக தளிர்விட்டு கீழும் மேலும் படர்ந்து இருக்கின்றன. அதன் விழுதுகள் மானிட உலகில் செயல்களை விளைவிப்பவனாய் கீழ் நோக்கி பரவியிருக்கின்றன.
15.3 : இங்கே அதன் உருவமோ அதன் முடிவோ ஆரம்பமோ தென்படுவதில்லை. அதற்கு நிலைத்த தன்மையும் இல்லை. நன்றாக வேரூன்றிய இந்த அரச மரத்தை பற்றின்மை என்னும் திடமான வாளால் வெட்டி வீழ்த்தவேண்டும்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

16 . தெய்வாசூர ஸம்பத் விபாக யோகம் (DIVINE AND DEMONIC QUALITIES )( மனிதனின் இரண்டு பக்கங்கள் )


16.1 - 3 : அர்ஜுனா ! பயமின்மை, மனத்தூய்மை, ஞானத்திலும், யோகத்திலும் நிலைபெற்றிருத்தல், தானம், புலனடக்கம், வழிபாடு, சாஸ்திரங்களை படித்தல், தவம், நேர்மை, தீங்கு செய்யாமை, உண்மை, கோபமின்மை, தியாகம், அமைதி, கோள்சொல்லாமை, உயிர்களிடம் இரக்கம், பிறரது பொருளை விரும்பாமை, மென்மை, நாணம், உறுதியான மனம், தைரியம், பொறுமை, திடசங்கல்பம், தூய்மை, வஞ்சகமின்மை, கர்வமின்மை ஆகியவை தெய்வீக இயல்புடன் பிறந்தவனுக்கு உரியவை ஆகின்றன.
16.4 : அர்ஜுனா ! அசுர இயல்புடன் பிறந்தவனுக்கு பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, கோபம், கடுமை, அறியாமை ஆகியவை பண்புகளாக அமைகின்றன.
16.5 : தெய்வீக இயல்பு மோட்சத்தை தருவது, அசுர இயல்பு பந்தத்தை தருவது என்று கருதபடுகிறது. அர்ஜுனா ! வருந்தாதே. நீ தெய்வீக இயல்புடன் பிறந்திருக்கிறாய்.
16.6 : அர்ஜுனா ! தெய்வீக இயல்பினர், அசுர இயல்பினர் என்று இந்த உலகில் இரண்டு வகையினர் உள்ளனர். தெய்வீக இயல்பு பற்றி விரிவாக கூறினேன். இனி அசுர இயல்பு பற்றி கூறுகிறேன் கேள்.
16.7 : எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்பது  அசுர இயல்பினருக்கு தெரியாது. அவர்களிடம் தூய்மை இல்லை. நல்லொழுக்கம் இல்லை. உண்மையும் இல்லை.
16.8 : உலகம் அடிப்படை நியதிகள் எதுவுமின்றி இயங்குவது, தர்மத்தில் நிலை பெறாதது. கடவுள் இல்லாதது. ஆண் – பெண் உறவினால் தோன்றியது. காமத்தை காரணமாக கொண்டது என்பதை தவிர வேறு என்ன ? என்று அசுர இயல்பினர் சொல்கின்றனர்.
16.9 : தங்கள் வாழ்க்கையை வீணடித்து கொண்ட, கொடுஞ்செயல் புரிகின்ற இந்த அற்ப புத்தியினர், ( முந்திய சுலோகத்தில் கூறிய ) கருத்தை பிடித்துகொண்டு உலகின் எதிரிகளாக அதன் அழிவிற்காகவே தோன்றியுள்ளனர்.
16.10 : நிறைவு செய்ய முடியாததான காமவசபட்டு, மதிமயங்கி, ஆடம்பரமும் தற்பெருமையும் கர்வமும் கொண்டு கெட்ட எண்ணங்களுடனும் தீய நோக்கங்களுடனும் அவர்கள் செயல்படுகிறார்கள்.
16.11 - 12 : அளவிட முடியாததும் மரணத்தை முடிவாக கொண்டதுமான ( ஆசைகளின் வசப்பட்டு, அவை நிறைவேறாததால் ) கவலையில் ஆழ்ந்து, காம நுகர்ச்சியையே அனைத்திலும் மேலானதாக கருதி, எல்லாம் இவ்வளவு தான் என்று தீர்மானித்து, நூற்றுகணக்கான ஆசைகளால் கட்டுப்பட்டு, காமம் கோபம் இவற்றின் வசப்பட்டு, காமபோகத்திற்காக நியாயமற்ற வழியில் செல்வக் குவியல்களை தேட முயல்கின்றனர்.
16.13 : இது, இன்று என்னால் அடையப்பட்டது, இந்த ஆசை இனி நிறைவேறப் பெரும். இது எனக்கு உள்ளது. இந்த செல்வமும் வந்து சேரும் என்றெல்லாம் அசுர இயல்பினர் மனகோட்டை கட்டுகின்றனர்.
16.14 : என்னால் இந்த எதிரி கொல்லப்பட்டான், மற்றவர்களையும் கொல்வேன் என்று இறுமாப்பு கொள்கிறார்கள். நானே தலைவன் நான் போகங்களை அனுபவிக்கிறேன். நான் நினைத்தது நிறைவேற பெற்றவன். பலசாலி, சுகமாயிருப்பவன் என்று ஆணவம் கொள்கிறார்கள்.
16.15 : அறியாமையில் மதிமயங்கிய அவர்கள், நான் பணக்காரன், உயர்குலத்தவன், எனக்கு சமமானவன் யார் ? நான் யோகம் செய்வேன், தானம் செய்வேன், மகிழ்ச்சியில் மிதப்பேன் என்றெல்லாம் பிதற்றுகிறார்கள்.
16.16 : பல்வேறு சிந்தனைகளால் குழப்பம் அடைந்த, மோகவலையில் சிக்கிய, காம போகங்களில் ஆழ்ந்த அவர்கள் பாழ் நகரில் வீழ்கிறார்கள்.
16.17 : தற்புகழ்ச்சி உடைய, பணிவற்ற, செல்வ செருக்கும் ஆணவமும் கொண்ட அவர்கள் விதிப்படி அல்லாமல் வெறும் ஆடம்பரதிற்க்காக யாகம் முதலியவற்றை செய்கிறார்கள்.
16.18 : ஆணவம், வலிமை, செருக்கு, காமம், கோபம் போன்றவற்றின் வசப்பட்டவர்கள் தங்களிலும் பிறரிலும் இருக்கின்ற என்னை வெறுத்து அவமதிக்கின்றனர்.
16.19 : வெறுக்கத்தக்க, கொடிய, மனிதர்களுள் கடைப்பட்ட, இழிந்த அவர்களை பிறப்பு – இறப்பு என்று சுழல்கின்ற சம்சார உலகில் அசுர இயல்புடைய பிறவிகளிலேயே நான் தொடர்ந்து தள்ளுகிறேன்.
16.20 : அர்ஜுனா ! அந்த மூடர்கள் பல பிறவிகளில் அசுர இயல்புடன் பிறந்து, என்னை அடையாமல் மேலும் மேலும் கீழான கதியை அடைகிறார்கள்.
16.21 : காமம், கோபம், பேராசை என்ற மூன்றும் நரகத்தின் வாசல்கள். இவை மனிதனை அழிக்கின்றன. ஆதலால் இந்த மூன்றையும் விட்டுவிட வேண்டும்.
16.22 :  அர்ஜுனா ! இந்த மூன்று நரக வாசல்களிலிருந்தும் விடுபட்ட மனிதன் தனக்கு நன்மை செய்கிறான். மேலான நிலையை அடைகிறான்.
16.23 : யார் சாஸ்திர விதியை புறக்கணித்து, காமத்தால் தூண்டபெற்று செயல்படுகிறானோ அவன் இறை நிலையையோ மோட்சத்தையோ அடைவதில்லை.
16.24 : செய்ய தக்கது எது, செய்ய தகாதது எது என்பதை நிச்ச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்கு பிரமாணம் ஆகிறது. சாஸ்திரம் சொல்வதை அறிந்து இந்த உலகத்தில் நீ செயல்பட கடமைபட்டிருக்கிறாய். 
BHAGAVAD GITA CHAPTER 16
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Wednesday, March 7, 2012

17 . ச்ரத்தா த்ரய விபாக யோகம் ( THREEFOLD FAITH )( வாழ்க்கையின் மூன்று கோணங்கள் )


17.1 : அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! யார் சாஸ்திர விதிப்படி அல்லாமல், ஆனால் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்களோ அவர்களின் நிலை என்ன ? சத்வ குணமா ? ரஜோ குணமா ? தமோ குணமா ?
17.2 : பகவான் சொன்னது : மனிதர்களுக்கு இயல்பாக அமைந்துள்ள அந்த நம்பிக்கைகள் சாத்வீகம், ராஜசம், தாமசம் என்று மூன்று விதமாக உள்ளது. அதை கேள்.
17.3 : அர்ஜுனா ! இயல்பிற்கு ஏற்பவே மனிதனின் நம்பிக்கைகள் அமைகின்றன. நம்பிக்கைகளின் விளைவே மனிதன். நம்பிக்கைகளே அவனை உருவாக்குகின்றன.
17.4 : சாத்வீகர்கள் தேவர்களை வணங்குகிறார்கள். ராஜச இயல்பினர் யட்சர்களையும் ராட்சசர்களையும், தாமச இயல்பினர் ஆவிகளையும் பூதங்களையும் வழிபடுகிறார்கள்.
17.5 – 6 : கர்வமும் அகங்காரமும் காமமும் ஆசையும் தீவிரமாக செயல்படுகின்ற மூடர்கள், உடம்பில் இருக்கின்ற புலன்களையும் உடம்பில் உறைகின்ற என்னையும் துன்புறுத்தி, சாஸ்திரத்தில் விதிக்கபடாத கோரமான தவம் செய்கிறார்கள். அவர்கள் அசுர இயல்பினர் என்று அறிந்து கொள்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

18 . மோட்ச சன்னியாச யோகம் (NIRVANA THROUGH RENUNCIATION)( கடமை மூலம் கடவுள் )


18.1 : அர்ஜுனன் சொன்னது : தோள்வலிமை மிக்கவனே ! கிருஷ்ணா !  கேசி என்ற அசுரனை கொன்றவனே ! சன்னியாசம், தியாகம் இரண்டின் உட்பொருளையும் தனித்தனியாக அறிய விரும்புகிறேன்.
18.2 : பகவான் சொன்னது : ஆசை வசப்பட்டு செய்கின்ற செயல்களை விடுவது சன்னியாசம் என்று மகான்கள் அறிகிறார்கள். செயல்களின் பலனை விட்டுவிடுவது தியாகம் என்று தீர்க்கதரிசிகள் சொல்கிறார்கள்.
18.3 : எல்லா செயல்களும் குற்றம் உடையவை. எனவே எல்லாம் துறக்கபட வேண்டியவை என்று ஒருசிலர் கூறுகின்றனர். வழிபாடு, தானம், தவம் போன்றவற்றவை துறக்ககூடாது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
18.4 : பரதகுலத்தில் சிறந்தவனே ! தியாக விஷயத்தில் எனது உறுதியான கருத்தை கேள். ஆண்களில் புலி போன்றவனே ! தியாகம் மூன்று விதம் என்று கூறப்பட்டுள்ளது.

18.5 : வழிபாடு, தானம், தவம் ஆகிய செயல்கள் விடுவதற்கு உரியவை அல்ல. இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும். இவை சான்றோர்களை( அதாவது உரிய விதத்தில் செய்பவர்களை ) புனிதபடுத்துபவை.
18.6 : அர்ஜுனா ! இந்த செயல்களையும் கூட பற்றை விட்டும் பலனை எதிர்பாராமலும் செய்ய வேண்டும் என்பது எனது உறுதியானதும் மேலானதுமான கருத்தாகும்.
18.7 : விதித்த கடமையை விடுவது சரியல்ல. மனத்தெளிவின்மை காரணமாக அவ்வாறு விடுவது தாமச தியாகம்.
18.8 : துன்பமாக இருக்கிறது என்ற காரணத்தாலும், உடம்பிற்கு தொந்தரவு என்ற பயத்தாலும் செயல்களை விடுவது ராஜச தியாகம். இந்த தியாகத்தினால் தியாகத்திற்கு உரிய பலன் கிடைப்பதில்லை.
18.9 : அர்ஜுனா ! சாதாரண செயல்களையே, அவை செய்யப்பட வேண்டியவை என்பதற்காக, பற்றையும் பலனையும் விட்டு செய்தால் அது சாத்வீக தியாகம்.
18.10 : சத்வம் நிறைந்த, உண்மையறிவுடைய, சந்தேகம் நீங்கபெற்ற, தியாக சிந்தனை உடைய ஒருவன், துன்பம் தருவது என்பதற்காக ஒரு செயலை வெறுப்பதில்லை. இன்பம் தருவது என்பதற்காக ஒரு செயலை விரும்புவதும் இல்லை.
18.11 : சாதாரண மனிதனால் செயல்களை அறவே விடுவது இயலாது. யார் வினைபயனை விட்டவனோ அவனே தியாகி.
18.12 : பற்றுடன் வேலை செய்பவர்கள் மரணத்திற்கு பிறகு இன்பமானது, துன்பமானது, இரண்டும் கலந்தது என்று மூன்று விதமான வினைபயன்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் பற்றை விட்டவர்களுக்கு ஒருபோதும் இந்த அனுபவங்கள் இல்லை.
18.13 : பெரும்தோள் உடையவனே ! கர்மம் இது என்று கூறுகின்ற சாங்கிய தத்துவத்தில் எல்லா கர்மங்களின் நிறைவிற்க்காக கூறப்பட்டுள்ள இந்த ஐந்து காரணங்களை என்னிடமிருந்து அறிந்து கொள்.
18.14 : உடம்பு, தன்முனைப்பு, பல்வேறு உறுப்புகள், பலவிதமான செயல்பாடுகள் இவற்றுடன் ஐந்தாவதாக தேவ சக்திகள் ஆகியவையே ஒரு கர்மத்திர்க்கு நிபந்தனைகள் ஆகின்றன.
18.15 : நியாயமானதோ, அநியாயமானதோ எந்த கர்மத்தையானாலும் சரி, உடலால், வாக்கால், மனத்தால் மனிதன் தொடங்கினால் அதற்கு இந்த ஐந்தும் காரணமாக அமைகின்றன.
18.16 : அது அப்படி இருக்க, தெளிவற்ற புத்தியின் காரணமாக யார் இறைவனை கர்த்தாவாக காண்கிறானோ அந்த மூடன் உண்மையை காண்பதில்லை.
18.17 : நான் செய்கிறேன் என்ற எண்ணம் யாருக்கு இல்லையோ, யாருடைய மனம் பற்றற்றதோ அவன் இந்த உலக உயிர்கள் அனைத்தையும் கொன்றாலும் கொன்றவன் ஆகமாட்டான். அந்த செயலால் வரும் பந்தமும் அவனுக்கு இல்லை.
18.18 :  அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் என்று கர்ம தூண்டுதல் மூன்று விதம். கருவி, செயல், செய்பவன் என்று செயலின் ஆதாரம் மூன்று விதம்.
18.19 : அறிவும் செயலும் செய்பவனும் குண வேறுப்பாட்டால் மூவகை என்று குணங்களை பற்றி கூறுவதான சாங்கிய சாஸ்திரத்தில் சொல்லபட்டுருக்கிறது. அவற்றையும் உள்ளபடி கேள்.
18.20 : வெவேறான உயிரினங்களில் வேறுபாடற்ற அழியாத ஒரே உணர்வை காண்கின்ற அறிவு சாத்வீக அறிவு.
18.21 : வெவ்வேறு உயிரினங்களை ஒன்றிலிருந்து ஒன்று வேறானதாக அறிகின்ற அறிவு ராஜச அறிவு.
18.22 : ஒரு பகுதியையே எல்லாம் என்று விடாபிடியாக பற்றி கொண்டு இருக்கின்ற, யுக்திக்கு பொருந்தாத, உண்மைக்கு பொருந்தாத, அற்பமான அறிவு தாமச அறிவு.
18.23 : பலனில் ஆசை வைக்காமல், பற்றின்றி, விருப்பு வெறுப்பு இன்றி, தனக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமையை செய்வது சாத்வீக செயல்.
18.24 : ஆசை வசப்பட்டு, தன்முனைப்புடன் மிகவும் பாடுபட்டு செய்ய செய்யபடுவது ராஜச செயல்.
18.25 : செயலின் விளைவையும் நஷ்டத்தையும் துன்பத்தையும் சொந்த ஆற்றலையும் எண்ணி பாராமல் மனமயக்கத்தால் தொடங்கபடுவது தாமச செயல்.
18.26 : பற்றற்றவன், அகங்காரம் இல்லாதவன், உறுதியும் ஊக்கமும் உடையவன், வெற்றி தோல்வியில் மாறுபடாதவன் சாத்வீக கர்த்தா.
18.27 : ஆசை வசபட்டவன், வினைபயனை நாடுபவன், கருமி, துன்பம் செய்பவன், தூய்மையற்றவன், மகிழ்ச்சியும் கவலையும் கொள்பவன் ராஜச கர்த்தா.
18.28 : ஒருமை படாத மனத்தினன், விவேகமற்றவன், முரடன், வஞ்சகன், பிறரது வேலையை கெடுப்பவன், சோம்பேறி, கவலையில் மூழ்கியவன், காலதாமதம் செய்பவன் தாம்ச கர்த்தா.
18.29 : புத்தி மற்றும் மன உறுதியின் தன்மைகளுக்கு ஏற்ப மூன்று விதமான வேறுபட்ட கண்ணோட்டங்களை தனித்தனியாக  முற்றிலும் சொல்கிறேன் கேள்.
18.30 : அர்ஜுனா ! உலகியல் வாழ்க்கை – முக்திபாதை, செய்ய தகாதது – செய்ய தக்கது, பயம் – பயமின்மை, பந்தம் – மோட்சம் ஆகியவற்றிக்கு இடையே உள்ள வேறுபாட்டை அறிவது சாத்வீக புத்தி. 
18.31 : அர்ஜுனா ! தர்மத்தையும் அதர்மத்தையும் செய்ய தக்கதையும் செய்ய தகாததையும் தாறுமாறாக அறிவது ராஜச புத்தி.
18.32 : அர்ஜுனா ! அறியாமை இருளால் மூடபெற்று அதர்மத்தை தர்மம் என்றும் எல்லாவற்றையும் விபரிதமாகவும் அறிவது தமாச புத்தி.
18.33 : அர்ஜுனா ! யோக வாழ்கையின் விளைவாக வருவது சாத்வீக உறுதி. பிறழாத அந்த உறுதியால் மனம், பிராணம் மற்றும் புலன்களின் செயல்பாடுகளை ஒருவன் நெறிபடுத்துகிறான்.
18.34 : குந்தியின் மகனே அர்ஜுனா ! எந்த உறுதியால் ஒருவன் அறம், இன்பம், பொருள் இவற்றை காக்கிறானோ, மிகுந்த பற்றுதலின் காரணமாக பலனை நாடுகிறானோ அது ராஜச உறுதி.
18.35 : அர்ஜுனா ! மூடன் கொல்வது தாமச உறுதி . அந்த உறுதியால் தூக்கம், பயம், கவலை, மனக்கலக்கம், கர்வம் இவற்றை அவன் விடாபிடியாக பற்றிக்கொண்டு வாழ்கிறான்.
18.36 – 37 : அர்ஜுனா ! மூவகை இன்பங்களை கேள். சாத்வீக இன்பம் ஆன்மாவில் நிலைபெற்ற புத்தியின் தெளிவினால் கிடைப்பது. ஆரம்பத்தில் விஷம் போலவும் முடிவில் அமுதம் போன்றும் இருப்பது. தொடர்ந்த பயிற்சியால் அது துக்கம் என்பதே இல்லாமல் செய்கிறது.
18.38 : பொருட்களும் புலன்களும் தொடர்புகொள்வதன் காரணமாக வருவதும், ஆரம்பத்தில் அமுதம் போன்றும் முடிவில் விஷம் போன்றும் இருப்பதும் ராஜச இன்பம்.
18.39 : தாமச இன்பம் ஆரம்பத்திலும் முடிவிலும் மனமயக்கம் தருகிறது. துக்கம், சோம்பல், தடுமாற்றம் ஆகியவற்றிலிருந்து தோன்றுகிறது.
18.40 : இயற்கையிலிருந்து தோன்றிய இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்ட உயிரினங்கள் பூமியிலோ, சொர்க்கதிலோ, தேவலோகத்திலோ இல்லை.
18.41 : எதிரிகளை எரிப்பவனே ! மன இயல்பிலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்ப பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களின் வேலைகள் பிரிக்கபட்டிருக்கின்றன.
18.42 : மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, கற்றறிவு, அனுபவ அறிவு, ஆன்ம நாட்டம் ஆகியவை இயல்பாக பிராமணனுக்கு உரியவை.
18.43 : பராக்கிரமம், மன ஆற்றல், செயல்திறன், சாதுர்யம், போரில் புறம்கட்டமை, கொடை, ஆளும் திறமை ஆகியவை இயல்பாக க்ஷத்திரியனுக்கு உரிய செயல்கள்.
18.44 : விவசாயம், மாடுகளை காத்தல், வாணிபம் ஆகியவை இயல்பாக வைசியனுக்கு உரிய செயல்கள். சூத்திரனுக்கு இயல்பானது குற்றேவல் செயல்கள்.
18.45 : தனக்குரிய கடமைகளில் இன்பம் காண்கின்ற மனிதன் நிறைநிலையை அடைகிறான். கடமையை செய்பவன் எப்படி நிறைநிலையை அடைகிறான் என்பதை கேள்.
18.46 : யாரிலிருந்து உயிர்கள் தோன்றியுள்ளனவோ, யாரால் இந்த பிரபஞ்சம் எல்லாம் வியாப்பிக்கபட்டிருக்கிறதோ அவரை தனது கடமையால் அர்ச்சித்து, மனிதன் இறைநிலையை அடைகிறான்.
18.47 : மன இயல்பிற்கு ஏற்ற வேலை நிறைவானதாக இல்லாமல் போகலாம். பிறர் வேலை நிறைவுடன் செய்ய தக்கதாக இருக்கலாம். இருப்பினும் தனக்குரிய வேலையை செய்வதே சிறந்தது. சொந்த இயல்பிற்கு ஏற்ற செயலை செய்பவன் கேட்டை அடைவதில்லை.
18.48 : குந்தியின் மகனே ! குறையுடன் கலந்ததாக இருந்தாலும் மன இயல்பிற்கேற்ப வேலையை விடக்கூடாது. ஏனெனில் நெருப்பு புகையால் சூழபட்டிருப்பது போல் எல்லா செயல்களும் குறையால் சூழப்பட்டுள்ளது.
18.49 : ( இயல்பிற்கேற்ற வேலையையும் ) முற்றிலும் பற்றற்று மனத்தை வசபடுத்தி, ஆசைகளை விட்டு செய்பவன் துறவின் மூலம் கிடைப்பதான செயலில் செயலின்மை காண்கின்ற மேலான நிலையை அடைகிறான்.
18.50 : குந்தியின் மகனே ! ( செயலில் செயலின்மை காண்கின்ற ) உயர் நிலையை அடைந்தவன் ஞானத்தின் மேலான முடிவாகிய இறைவனை எப்படி அடைகிறானோ அதை சுருக்கமாக கூறுகிறேன்.
18.51 – 53 :தூய புத்தியுடன், உறுதியாக தன்னை அடக்கி, ஒளி முதலான விஷயங்களை விட்டு, விருப்பு வெறுப்பை நீக்கி, தனிமையில் இருந்து, மிதமாக உண்டு, சொல் செயல் மனம் இவற்றை கட்டுபடுத்தி, எப்போதும் தியான யோகத்தில் திளைத்திருந்து காமம் கோபம் உடைமை இவற்றை விட்டு எனதென்பது இல்லாமல் சாந்தமாக இருப்பவன் சமகாட்சி நிலையை அடைவதற்கு தகுதி உடையவன்.        
18.54 : சமகாட்சி நிலையில் உறுதிபெற்ற, தெளிந்த மனம் உடைய அவன் கவலைபடுவதில்லை, ஆசை கொள்வதில்லை. எல்லா உயிர்களிடமும் சமமாக இருக்கின்ற அவன் என் மீது உயர்ந்த பக்தியை அடைகிறான்.
18.55 : நான் யார், எப்படிபட்டவன் என்பதை உள்ளது உள்ளபடி பக்தியால் அவன் அறிகிறான். அவ்வாறு என்னை உள்ளபடி அறிந்த பிறகு விரைவில் என்னை அடைகிறான்.
18.56 : எப்போதும் என்னை சரணடைந்து, எல்லா வேலைகளையும் செய்பவன் நிலையான குறையற்ற நிலையை எனதருளால் அடைகிறான்.
18.57 : எல்லா வேலைகளையும் மனத்தால் என்னிடம் வைத்து, என்னையே கதியாக கொண்டு, புத்தி யோகத்தின் மூலம் எப்போதும் என்னில் நிலைபெற்றவனாக ஆவாய்.
18.58 : என்னில் மனத்தை வைத்தால் எல்லா தடைகளையும் எனதருளால் தாண்டி செல்வாய். மாறாக அகங்காரத்தின் காரணமாக என் பேச்சை கேட்காவிட்டால் அழிவாய்.
18.59 : அகங்காரத்தின் வசப்பட்டு, போர் செய்ய மாட்டேன் என்று நினைத்தால் உனது அந்த முடிவு வீணானது. உன் மன இயல்பே உன்னை போரில் ஈடுபடுத்தி விடும்.
18.60 : குந்தியின் மகனே ! எதை செய்வதற்கு மனகுழப்பத்தின் காரணமாக தயங்குகிறாயோ, அதையே மன இயல்பின் காரணமாக தோன்றிய வினைபயனால் கட்டுண்டு, தன்வசம் இல்லாமல் செய்வாய்.
18.61 : அர்ஜுனா ! இறைவன் எல்லா உயிர்களின் இதயத்தில் இருக்கிறார். எல்லா உயிர்களையும் தனது சக்தியால் எந்திரத்தில் சுழற்றுவது போல் ஆட்டி வைக்கிறார்.
18.62 : அர்ஜுனா ! இறைவனையே எல்லா விதத்திலும் சரணடை. அவரது அருளால் மேலான அமைதியையும் அழிவற்ற நிலையையும் அடைவாய்.
18.63 : ரகசியங்களுள் மேலான ரகசியத்தை இவ்வாறு நான் உனக்கு சொன்னேன். இதை நன்றாக ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படி செய்.
18.64 : அனைத்திலும் ரகசியமான எனது மேலான அறிவுரையை மீண்டும் கேள். எனது உற்ற நண்பனாக இருக்கிறாய் அதனால் உனக்கு நல்லதை சொல்கிறேன்.
18.65 : என்னிடம் மனத்தை வை. என் பக்தனாக இரு. என்னை வழிபாடு, என்னை வணங்கு, என்னையே அடைவாய். உனக்கு சத்தியம் செய்து இதனை உறுதி கூறுகிறேன். எனக்கு உகந்தவன் நீ.
18.66 : எல்லா கர்மங்களையும் அறவே விட்டு என்னை மட்டுமே சரணடை. நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன் வருந்தாதே.
18.67 : தவமில்லாதவன், பக்தி இல்லாதவன், சேவை செய்யாதவன், என்னை நிந்திப்பவன் – இவர்களுக்கு ஒரு போதும் நீ இந்த கீதா உபதேசத்தை சொல்ல கூடாது.
18.68 : யார் இந்த மேலான ரகசியத்தை என் பக்தர்களுக்கு சொல்கிறானோ, என்னிடம் மேலான பக்தி கொள்கிறானோ அவன் சந்தேகமில்லாமல் என்னையே அடைகிறான்.
18.69 : மனிதர்களுள் எனக்கு மிகவும் பிரியமானதை செய்பவனும் மிகவும் பிரியமானவனும் அவனை விட வேறு யாரும் இல்லை. இருக்கவும் மாட்டான்.
18.70 : தர்மபரமான இந்த நமது உரையாடலை யார் படிக்கிறானோ அவன் என்னை அறிவு வேள்வியால் வழிப்பட்டவன் ஆவான். இது எனது கருத்து.
18.71 : இதனை அவமதிக்காமல், செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையோடு ஒருவன் கேட்டால் அவனும் முக்தனாகி புண்ணியம் செய்தவர்கள் அடைகின்ற நல்லுலகங்களை அடைவான்.
18.72 : அர்ஜுனா ! இதனை நீ ஒருமுகப்பட்ட மனத்துடன் கேட்டாயா ? தனஞ்சயா ! அறியாமையிலிருந்து தோன்றியதான உனது மனக்குழப்பம் தெளிந்ததா ?
18.73 : அர்ஜுனன் சொன்னது : கிருஷ்ணா ! உனதருளால் என் மனமயக்கம் ஒழிந்தது. சுயநினைவு வந்தது. சந்தேகங்கள் விலகின . என் மனம் உறுதி பெற்று விட்டது. உனது சொற்படியே செய்கிறேன்.
18.74 : சஞ்சயன் சொன்னது : இவ்வாறு கிருஷ்ணருக்கும் சிறந்தவனாகிய அர்ஜுனனுக்கும் நடைபெற்றதும் மயிர்கூச்செரிவதும் அற்புதமானதுமான உரையாடலை நான் கேட்டேன்.
18.75 : இந்த மேலான சிறந்த யோகத்தை யோகேசுவரனாகிய கிருஷ்ணர் தாமே சொல்வதை வியாசரின் அருளால் நான் நேரடியாக கேட்டேன்.
18.76 : மன்னா ! கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த இந்த புண்ணியமான அற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் மகிழ்கிறேன்.
18.77 : மன்னா ! ஹரியின் அந்த அற்புத வடிவத்தை எண்ணியெண்ணி எனக்கு பெரும் வியப்பு உண்டாகிறது. நான் மேலும் மேலும் களிப்படைகிறேன்.
18.78 : யோகேசுவரனாகிய கிருஷ்ணரும் வில்லை தாங்கிய அர்ஜுனனும் எங்கே உள்ளார்களோ அங்கே செல்வமும் வெற்றியும் வளமும் நீதியும் நிலைத்திருக்கும். இது எனது கருத்து.              
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...